170 நாடுகளுக்கு விரிவடையும் ChatGPT Go: புதிய GPT - 5.2 மாடல் அறிமுகம்
OpenAI நிறுவனம் புதிய GPT - 5.2 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
விரிவடையும் ChatGPT Go
உலக அளவில் ChatGPT-யின் பயனர்களை அதிகரிக்கும் நோக்கில் OpenAI நிறுவனம் “ChatGPT Go” என்ற விலை குறைந்த புதிய கட்டண சந்தா திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை தற்போது 170 நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த ChatGPT Go திட்டத்திற்கு சந்தா கட்டணமாக $8 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ChatGPT Go திட்டமானது, OpenAI நிறுவனத்தின் இலவச ChatGPT திட்டத்திற்கும், அதிக கட்டணம் கொண்ட ChatGPT Plus திட்டத்திற்கும் இடைப்பட்டது ஆகும்.
ChatGPT Go சிறப்பம்சங்கள்
ChatGPT Go-யின் மூலம் பயனர்கள் OpenAI-யின் புதிய GPT - 5.2 Instant மாடலை பயன்படுத்த முடியும்.
இலவச பயனர்களை விட இதில் கூடுதலான செய்திகளை அனுப்புதல், புகைப்படங்களை பெறுதல், கோப்புகளை பதிவேற்றுதல் ஆகியவற்றை செய்ய முடியும்.
இதில் Context window மற்றும் நினைவாற்றல் வசதிகள் இருப்பதால் இதனால் பழைய உரையாடல்களை துல்லியமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |