ChatGPT-5.1 புதுப்பிப்பை வெளியிட்ட OpenAI நிறுவனம்: மனிதனுக்கு நிகரான உரையாடல்
OpenAI நிறுவனம் தனது புதிய ChatGPT-5.1 ஐ வெளியிட்டுள்ளது.
OpenAI ChatGPT-5.1
OpenAI நிறுவனம் தங்களது பெரிய மொழி மாதிரியின் புதிய புதுப்பிப்பான ChatGPT-5.1 ஐ வெளியிட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த புதுப்பிப்பது பயனர்களுடனான உரையாடல்களின் தரத்தை உயர்த்தி இருப்பதாக உறுதியளித்துள்ளது.

இந்த ChatGPT-5.1 புதுப்பிப்பில் தனிப்பயனாக்கம் மற்றும் தகவமைப்பு நுண்ணறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த புதுப்பிப்பில் இரண்டு சிறப்பு வாய்ந்த மொழித்திறன் மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது பயனர்களின் கேள்விகளுக்கு சிறந்த பதில் மாதிரியை தேர்ந்தெடுத்து வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மொழித்திறன் மாதிரிகள்
புதுப்பிப்பில் GPT-5.1 Instant மற்றும் GPT-5.1 Thinking என்ற இரண்டு மொழித்திறன் மாதிரிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் GPT-5.1 Instant ஆழமான கேள்விகளுக்கு சிறிது நேரம் எடுத்து கொண்டும், எளிய கேள்விகளுக்கு உடனடியாகவும் பதில் வழங்கும்.
GPT-5.1 Thinking சிக்கலான பிரச்சனைக்கு சிறப்பான தீர்வு தரும் மற்றும் மேம்பட்ட பகுத்தறிவு கொண்ட மொழி மாதிரியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த GPT-5.1 Instant மற்றும் GPT-5.1 Thinking ஆகிய இரண்டு மொழி மாதிரிகளும் அடுத்த வாரத்திற்குள் பயனர்களுக்கு படிப்படியாக கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |