போயிங் 737 Max விமான விபத்து: இந்திய குடும்பத்திற்கு $28.45 மில்லியன் இழப்பீடு
போயிங் 737 Max விமான விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய குடும்பத்திற்கு விமான நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போயிங் 737 Max விமான விபத்து
கடந்த 2019ம் ஆண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 விபத்தில் ஷிகா கார்க் என்ற டெல்லியை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
இரண்டு Max விமான விபத்துகளில் உயிரிழந்த 346 பேரில் ஷிகா கார்க்கும் ஒருவர் ஆவார்.

இவரது மரணத்துடன் தொடர்புடைய வழக்கு சிகாகோவில் உள்ள மத்திய நீதிமன்ற ஜூரி குழ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இரண்டு மணி நேரம் நீடித்த ஆலோசனைகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட இந்திய பெண்ணின் குடும்பத்திற்கு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் $28.45 மில்லியன் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக அறிவிக்கப்பட்ட $28.45 மில்லியன் தொகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்திற்காக $10மில்லியன் தொகையும், ஷிகா கார்க்கின் வலி மற்றும் துன்பத்திற்காக $10மில்லியன் தொகையும், மீதமுள்ள தொகை கூடுதல் இழப்பீடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கார்க்கின் கணவன் செளம்யா பட்டாச்சார்யா நீதிமன்ற ஜூரி குழுவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
போயிங் நிறுவனம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுவது தங்கள் பொறுப்பு என்று ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், இழப்பீட்டு தொகையை தீர்மானிக்க இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |