OpenAI நிறுவனம் மீது குற்றம்சாட்டிய முன்னாள் ஊழியர்! குடியிருப்பில் சடலமாக கண்டெடுப்பு
OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான இந்திய வம்சாவளி இளைஞர் சுசீர் பாலாஜி அவரது குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
OpenAI ஊழியர் சடலமாக கண்டெடுப்பு
கடந்த நவம்பர் 26 ஆம் திகதி, செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI இன் செயல்பாடுகள் குறித்து பொது வெளியில் கவலை தெரிவித்திருந்த முன்னாள் ஊழியர் சுசீர் பாலாஜி (Suchir Balaji, 26) சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சான் பிரான்சிஸ்கோ பொலிஸார் மற்றும் மருத்துவ பரிசோதனை அலுவலகம் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை என்றாலும், சந்தேகத்திற்குரிய தாக்குதல் சம்பவங்கள் எதுவும் காரணம் இல்லை என்று பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
OpenAI நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு
உயிரிழப்புக்கு முன்னதாக புகழ்பெற்ற ChatGPT உள்ளிட்ட AI மாதிரிகளைப் பயிற்றுவிக்க OpenAI காப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை OpenAI பயன்படுத்தியதாக சுசீர் பாலாஜி குற்றம் சாட்டினார்.
🚨This was Suchir Balaji, the 26 year old OpenAI whistleblower found dead's last post on his X. He probably wanted this out there, so here it is. pic.twitter.com/BJlH9FjXih
— Autism Capital 🧩 (@AutismCapital) December 14, 2024
மேலும் சுசீர் பாலாஜி OpenAI நிறுவனம் அமெரிக்க காப்புரிமை சட்டத்தை மீறுவதாக பல்வேறு பொது அறிக்கைகள் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இணையத்தளத்திற்கான பேட்டியில் விவரித்தார்.
அத்துடன் OpenAI-யின் இந்த முறைகள் விரிவான இணைய சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளன என்றும், தொழில் முனைவோர் மற்றும் வணிகங்களை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் சுசீர் பாலாஜி கவலை தெரிவித்து இருந்தார்.
OpenAIக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சுசீர் பாலாஜி மரணம் நிகழ்ந்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |