ஆபரேஷன் சிந்தூர் NCERT பாடத்திட்டத்தில் இணைப்பு
இந்தியாவின் மிக முக்கியமான ராணுவ நடவடிக்கையாக கருதப்படும் ஆபரேஷன் சிந்தூர், தற்போது பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகவுள்ளது.
இந்திய கல்வி அமைச்சகத்தின் தகவலின்படி, NCERT நிறுவனத்தால் வகுப்பு 3 முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கு சிறப்பு கல்வி தொகுப்பு தயாரிக்கப்படுகிறது.
இரண்டு பாகங்களாக அமையும் இந்த பாடம் – வகுப்பு 3 முதல் 8 வரை ஒரு தொகுப்பு, வகுப்பு 9 முதல் 12 வரை மற்றொன்று – 8 முதல் 10 பக்கங்கள் கொண்டிருக்கும்.
இதில் இந்திய ராணுவத்தின் வீரமும், பாகிஸ்தானை எதிர்த்து வெற்றி பெற்ற வீர நடவடிக்கைகளும் தெளிவாக விளக்கப்படும்.
ஏப்ரல் 22, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மே 7-ஆம் திகதி இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” எனும் துல்லிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம், இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது என்றும் இது மாணவர்களுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த புதிய பாடத்திட்டத்தில் மிஷன் LiFE, பிரிவினை காலத்திலான கொடூரங்கள், இந்தியாவின் விண்வெளி சாதனைகள் (சந்திரயான், ஆதித்யா L1, இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இந்திய வீரர் சுபன்ஷு ஷுக்லா சென்ற நிகழ்வு) ஆகியவையும் சேர்க்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |