காலிஸ்தானியர்களுடன் தொடர்புடைய Wikipedia? இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக வெளியான அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவுக்கு எதிரான கட்டுக்கதைகளை பரப்பும் அமைப்புகளுடன் Wikipedia தொடர்பு கொண்டுள்ளதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.
435 நிர்வாகிகள்
OpIndia ஆய்வறிக்கை Wikipedia குறித்த பல தகவல்களை கூறியுள்ளது. இந்த அறிக்கையின்படி, Wikipedia கட்டுரைகளில் திருத்தம் செய்வதைத் தடுப்பது, Edit செய்பவர்களைத் தடை செய்வது, பிரச்சனைகளை முடிவு செய்வது, பக்கங்களை நீக்குவது, பக்கங்களை Lock செய்வது போன்றவற்றை அதிகாரம் படைத்த ஒருசிலர் மட்டும் செய்கிறார்களாம்.
இந்த அதிகாரங்களை உலகெங்கிலும் உள்ள 435 நிர்வாகிகள் மட்டுமே கொண்டுள்ளார்கள் எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால், Wikipediaவின் நடுவர் குழுவில் 10 பேர் மட்டும்தான் உள்ளனர். Wikipediaவும் மற்ற நிறுவனங்களைப் போலவே கடுமையான உள்ளடக்கக் கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளைக் கொண்டுள்ளது என்பதை இவ்வறிக்கை கூறுகிறது.
Lock செய்யப்பட்ட பக்கங்கள்
மேலும், பிரபலங்களைப் பற்றிய அவதூறு கருத்துகள் அடங்கிய பக்கங்களை உருவாக்க கூகுள் Wikipediaவை பயன்படுத்துவதாகவும், பெரும்பாலான நேரங்களில் சர்ச்சைக்குரிய இந்தப் பக்கங்கள் Lock செய்யப்பட்டு இருப்பதாகவும், ஒரு சில Editors மற்றும் நிர்வாகிகள் மட்டுமே இவற்றைத் திருத்த முடியும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் யாரேனும் ஒருவர் தவறான தகவலை சரிசெய்ய அல்லது சார்பு கருத்துக்களை சரிசெய்ய முயன்றால் அவர்கள் தடுக்கப்படுகிறார்களாம்.
Wikipediaவை நடத்தும் விக்கிபீடியா அறக்கட்டளையானது மில்லியன் கணக்கான நன்கொடைகளையும், மானியங்களையும் பெற்றுள்ளது.
குறைந்தபட்சம் இன்னும் 75 ஆண்டுகள் செயல்படுவதற்கு தேவையான Endowment Fund மற்றும் சொத்துக்கள் Wikipediaவிடம் உள்ளன.
டைட்ஸ் அறக்கட்டளையும், Wikipedia அறக்கட்டளையும் இணைந்து பல இந்திய எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு அமைப்புகளுக்கு நன்கொடைகளை வழங்குகின்றன.
குறிப்பாக, மனித உரிமைகளுக்கான இந்துக்கள் என்ற அமைப்புக்கு டைட்ஸ் அறக்கட்டளை மானியங்களை வழங்கியுள்ளது. இது இஸ்லாமியர்கள் மாற்று காலிஸ்தானியர்களுடன் தொடர்புடையது என OpIndia ஆய்வறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.
இறையாண்மையை சீர்குலைக்க
அதேபோல், டைட்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து அமன் அறக்கட்டளை நிதியுதவி பெற்றுள்ளது. இது இந்து எதிர்ப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரான கட்டுக்கதைகளைப் பரப்பும் இடது சார்பு கொண்ட பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புகொண்டது எனவும் இந்த அறிக்கை கூறியுள்ளது.
அத்துடன் சீனாவின் ஆதரவு பெற்ற News Click நிறுவனத்துடன் அமன் அறக்கட்டளைக்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்திய இறையாண்மையை சீர்குலைக்க முயலும் சீன நிறுவனங்கள் மூலம் News Clickயிற்கு நிதி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது என்றும் OpIndia அறிக்கை கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |