BJPயை வீழ்த்துவதே அனைவரின் நோக்கம்- முக ஸ்டாலின்
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர் பேசிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாஜக-வை வீழ்த்துவதே அனைவரின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஓரணியில் ஒன்றிணைவது தொடர்பாக பாட்னாவில் எதிர்க்கட்சிகள் தலைவர் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, லல்லு பிரசாத் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது, எதிர்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.
எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்த கட்சியின் தலைமையில் தான் கூட்டணி.
யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முடிவு செய்யவில்லை, பாஜக வீழ்த்துவது மட்டுமே நோக்கம், 2024ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் இது நடக்கும்.
செயற்திட்டங்களை வகுத்து ஓரணியாக நின்று பாஜக தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.