கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்: முதலமைச்சர் தாக்கு
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்கின்றனர் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக வெளிநடப்பு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க அதிமுக, பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
அதாவது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதோடு தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பின்னர், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து மற்ற கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
முதலமைச்சர் தாக்கு
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்.
முதலமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு… எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.
அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |