எப்ஸ்டீனை தனியாக சந்தித்த அமைச்சர் பூரி; ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்
opposition parties question puri met epstein: எப்ஸ்டீனை மத்திய அமைச்சர் பூரி தனியாக சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்புபடுத்தி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
எப்ஸ்டீனை தனியாக சந்தித்த அமைச்சர் பூரி
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர் மற்றும் ஏராளமான சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறையில் இருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பின்னர், எப்ஸ்டீன் தொடர்பான புகைப்படங்கள், மின்னஞ்சல் உரையாடல் உட்பட 30 லட்ச பக்க ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல் உரையாடல்களில், இந்திய பிரதமர் மோடி, தொழிலதிபர் அனில் அம்பானி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து விளக்கமளித்த ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச அமைதி நிறுவனத்தில் (IPI) தனது முன்னாள் மேலாளர் தலைமையிலான தூதுக்குழுவின் ஒரு பகுதியாக எப்ஸ்டீனைச் சந்தித்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில், சூட் அணிந்த பூரி, கருப்பு நிற டர்டில்நெக் ஸ்வெட்டர் அணிந்துள்ள எப்ஸ்டீனுக்கு எதிரே அமர்ந்திக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர்.

மேலும், எப்ஸ்டீன் சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இரு புகைப்படங்களும் ஒரே அறையில் எடுக்கப்பட்டது போல் தோற்றமளிக்கிறது.
இந்நிலையில், முன்னதாக பூரி குழுவாகவே எப்ஸ்டீனை சந்தித்தாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் தனியாக உள்ள புகைப்படங்கள் வெளியானது குறித்தும், இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்பு படுத்தியும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
காங்கிரஸ் கேள்வி
இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "எப்ஸ்டீன் தனது கொடூரமான குற்றங்களைச் செய்த அதே அறைகளில் பூரி அவரைச் சந்தித்தார் என்பதை நிரூபிக்கும் சமீபத்திய வெளிப்பாடுகளால் நான் உண்மையிலேயே அருவருப்படைகிறேன்.
இது குறித்து மோடி- ஷாவின் முழுமையான மௌனமும் செயலற்ற தன்மையும், தங்களது சொந்த அமைச்சரவை அமைச்சருக்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் காட்டும் குற்றவியல் ரீதியான அலட்சியத்தையே சுட்டிக்காட்டுகிறது.
Modi did nothing despite knowing fully well about Hardeep Puri's close ties with known international pedophile Jeffrey Epstein. Truly disgusted by the latest revelations proving that Puri met Epstein in the same rooms where Epstein carried out his heinous crimes. Modi-Shah's complete silence and inaction on this only points to their criminal indifference to such allegations against their own Cabinet Minister. What can women expect from a Government that shields and nurtures a man with close ties to the worst sexual predator known to human civilisation? There is also an urgent need for PM Modi to speak up on this issue, because US President Donald Trump has also declared that India and US are extremely close to signing a trade deal. Do these revelations have any bearings on the final contours of the deal? Given how lopsided the previous deal was, there is every chance that the Compromised PM will once again surrender India's interests to shield himself and those close to him.
— K C Venugopal (@kcvenugopalmp) October 21, 2026
இந்தப் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டிய அவசரத் தேவையும் உள்ளது, ஏனெனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மிக அருகில் இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த வெளிப்பாடுகள் ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
முந்தைய ஒப்பந்தம் எவ்வளவு ஒருதலைப்பட்சமாக இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டால், சமரசத்திற்கு உள்ளான பிரதமர் தன்னையும் தனக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாப்பதற்காக இந்தியாவின் நலன்களை மீண்டும் ஒருமுறை விட்டுக்கொடுக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன" என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பூரி வெளியிட்ட விளக்க காணொளியையும், இந்த புகைப்படங்களையும் பகிர்ந்த,திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "எப்ஸ்டீன் பாஜி, ஒரு தூதுக்குழுவின் ஒரு பகுதியாக 3-4 முறை மட்டுமே எப்ஸ்டீனைச் சந்தித்ததாக எங்களிடம் கூறினார்.
Epstein Paaji told us he only met Epstein as part of a delegation 3-4 times. Guess the other delegates were hiding under the table in these 2 photos, Paaji. https://t.co/kOy0RwIbkL
— Mahua Moitra (@MahuaMoitra) October 20, 2026
இந்த 2 புகைப்படங்களிலும் மற்ற தூதுக்குழுவினர் மேஜையின் கீழ் ஒளிந்திருந்தார்கள் என்று நினைக்கிறேன், பாஜி," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும் லட்சக்கணக்காண ஆவணங்கள் வெளியிடப்படாமல் உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்கா பாதுகாப்பு துறை செயலாளர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.