அதிமுக-சசிகலா இணைப்பு பற்றி முதல்முறையாக மனம் திறந்த ஓபிஎஸ்!
அதிமுக - சசிகலா இணைப்பு பற்றி தமிழகத்தின் துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் மனம்திறந்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த அவரது ஆதர்வாளர்களுக்கு அதிர்ச்சிக்கொடுத்தார்.
இந்நிலையில், பிரபல பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் அதிமுக - அமமுக (சசிகலா) இணைப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், பொதுவாக என்னை பொறுத்தவரையில், எம்ஜிஆர் சக்திகளும், ஜெயலலிதா சக்திகளும் பிரிந்திருப்பது நல்லதல்ல என நினைக்கிறேன்.
நாங்கள் எல்லாம், இந்த இயக்கத்தை துவக்ககலாம் முதல் உருவாக்கி, எதையும் எதிர்பாராமல், பதவி வரும் என, எதிர்பாராமல் உழைத்தவர்கள்.
தொண்டர்கள் இயக்கமாக, அதிமுக உள்ளது. இந்த தொண்டர்கள் பிரிந்திருப்பதால், எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவான அதிமுக-விற்கு எந்த பின்னடைவும் வந்து விடக்கூடாத.
எம்ஜிஆர், ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட அனைவருமே, ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டம் என்பது தான் என் அபிப்ராயம். இதில் மாறுபாட்ட கருத்து கிடையாது என தெரிவித்துள்ளார்.