ஓபிஎஸ் மகன் பாலியல் தொல்லை! இளம்பெண் புகார் (வீடியோ)
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இளம்பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஆர் மீது பாலியல் புகார்
இந்திய மாநிலம் தமிழக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் மீது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரி தேவி என்ற பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த பெண் கூறியதாவது,"எங்கள் குடும்பமும், ஓ.பன்னீர்செல்வம் குடும்பமும் நண்பர்களாக பழகி வருகிறோம். ஓ.பி.ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி என்னுடைய நண்பர். அவருடைய மற்றொரு தோழியான மலர் என்பவருடன் தான் அவருக்கு தொடர்பு இருந்தது.
பின்பு ஒருநாள் ரவி அண்ணாவின் போனில் இருந்து ஒருவர் என்னிடம் பேசினார். அவர், ஓ.பி.ரவீந்திரநாத் உங்கள் மீது ஆர்வமாய் இருக்கிறார் எனக் கூறினார்.
நான் அவரிடம் ஓ.பி.ரவீந்திரநாத்தை அண்ணனாகவும், ஓ.பன்னீர்செல்வத்தை அப்பாவாகவும் பார்க்கிறேன் என்றேன்.
பின்பு ஒரு நாள் ஓ.பி.ரவீந்திரநாத் போனில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது, முதலில் நன்றாக பேசிய அவர், சிறிது நேரத்திற்கு பிறகு ஆபாசமாக பேச தொடங்கி விட்டார். பின்பு அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் நான் போனை கட் செய்துவிட்டேன்.
வீடியோ கால் தான் எனக்கு ஆதாரங்கள்
பின்பு, அவரிடம் இருந்து ஆபாசமாக வீடியோ காலில் வர சொல்லி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும் பெண் குழந்தை உள்ளது. அவருக்கு இது போல போன் வந்தால் சும்மா இருப்பாரா?. இதுகுறித்து நான் அவரின் மனைவியிடமும் கூறினேன்.
மன்னிப்பு கேட்காவிட்டால் மீடியாவுக்கு போவேன் என்று கூறிய நிலையில் எனக்கு மிரட்டல்கள் வந்தன. மேலும், இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடமும் கூறினேன். ஆனால், அவர் இதை கண்டுகொள்ளவில்லை. அவரின் நண்பர் முருகனிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.
அவர், எனக்கு விடுத்த வீடியோ கால்கள் தான் ஆதாரமாக உள்ளன. அதை டிஜிபி அலுவலகத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளேன் எனக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |