தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையில் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |