தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
சனிக்கிழமை அரபிக்கடலிலும், வரும் 24ஆம் திகதி வங்கக்கடலிலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 32°C ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26°C ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |