அடேங்கப்பா... தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் புளிப்பு சுவை கொண்டது. அதன் நிறம் அனைவரையும் கவரும். குளிர் காலங்களில் ஆரஞ்சு பழம் மிக மலிவாகவே கிடைக்கும்.
இப்பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து உட்பட எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது.
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலுக்கு எவ்வளவு நன்மையை கொடுக்கும் என்பதை பார்ப்போம் -
சிறுநீரக கற்கள்
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உருவான சிறுநீரக கற்கள் உருவாவதை தடுத்து விடும்.
உடல் எடை குறைய
ஆரஞ்சு ஜூஸில் நிறைய நார்சத்து உள்ளது. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், இது கொழுப்பை கரைத்து உடல் எடையை சீக்கிரம் குறைய வைக்கும்.
இரத்த அழுத்தத்திற்கு
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்யும். உடலில் உள்ள சோடிய அளவை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஆரஞ்சு ஜூஸில் உள்ள வைட்டமின் சி சத்து, நம் உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். மேலும், அனைத்து நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
சருமத்திற்கு
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், முதுமையை விரட்டி சருமத்தை இளமையாக மிளிரச் செய்யும்.
வாய் துர்நாற்றம்
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கும். ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் சொத்தை ஏற்படுவது ஏற்படுவதை தடுக்கும்.