புடினுக்காக ட்ரம்பிடம் தூது போகும் ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இடையே மீண்டும் ஒரு சந்திப்பு நடக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹங்கேரியின் தீவிர வலதுசாரி பிரதமர் வெள்ளை மாளிகைக்கு செல்லவிருக்கிறார்.
தடைகளிலிருந்து விலக்கு
இரு தலைவர்களின் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனின் ஆலோசகர்களும் கூறுகின்றனர்.

ஹங்கேரியில் இந்த முறை சந்திப்பு நடத்தட்டும் என முன்மொழியும் ஆர்பன், ரஷ்ய எண்ணெய்க்கு எதிரான அமெரிக்கத் தடைகளிலிருந்து விலக்கு அளிக்கவும் கோர இருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பொறுப்புக்கு வந்த ட்ரம்பின் மிகக்கடுமையான நடவடிக்கையாக ரஷ்யா மீதான எண்ணெய் தடைகள் பார்க்கப்படுகிறது.
ஆனால் உண்மையில், புதிய எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத உள்நாட்டு சவாலை எதிர்கொள்ளும் நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ட்ரம்பை ஹங்கேரிக்கு விஜயம் செய்ய வைக்க வேண்டும் என ஆர்பன் திட்டமிட்டு வருகிறார்.
ட்ரம்ப் வருகையால் சர்வதேச அளவில் தமக்கு செல்வாக்கு இருப்பதை உள்ளூரில் அவரால் நிரூபிக்க வாய்ப்பாக இருக்கும் என்றே அவரது ஆலோசகர்கள் நம்புகின்றனர்.

கலந்து கொள்ளவில்லை
ரஷ்ய எரிவாயு குறித்து ட்ரம்பிடம் ஆலோசிக்க இருக்கும் ஆர்பன், தேர்தலில் தமது வெற்றிக்கு ட்ரம்பின் வருகை உதவும் என்பதை அவருக்கு விளக்குவார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், புடாபெஸ்டில் நடந்த அனைத்து முக்கிய சர்வதேச நிகழ்வுகளிலும் ட்ரம்ப் குறிப்பிடத்தக்க வகையில் கலந்து கொள்ளவில்லை, இதில் CPAC மாநாடுகளும் அடங்கும்.

தீவிர வலதுசாரி என்பதால் ட்ரம்பிடம் தொடர்ந்து நெருக்கத்தை ஏற்படுத்திவரும் ஆர்பன், ட்ரம்பாலும் அவரது நெருக்கமான வட்டாரத்தாலும் நீண்ட காலமாக பாராட்டப்பட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |