ஆர்டர் செய்தது ஐ-போன்! பார்சலில் வந்தது என்ன தெரியுமா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்
இந்தியாவில் ஐ போன் ஆர்டர் செய்த நபருக்கு போனுக்கு பதிலாக சலவை சோப்பு டெலிவரி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியில் வசித்து வருபவர் நூருல் அமீன். இவர் கடந்த 12ஆம் திகதி அமேசானில் ஆப்பிள் ஐபோன் 12 ஆர்டர் செய்துள்ளார்.
பின்னர் அவர் ஆர்டர் செய்த பொருள் மூன்று நாட்கள் கழித்து டெலிவரி செய்யப்பட்டது. அப்போது வந்த பார்சலை டெலிவரி செய்த நபரின் முன்னிலையிலேயே நூருல் அமீன் பிரித்துள்ளார்.
அதில் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதில் ஒரு விம் சலவை சோப்பும் மற்றும் அதனுடன் 5 ரூபாய் நாணயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டெலிவரி செய்தவரிடம் விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நூருல் அமீன் அமேசான் நிறுவனம் செய்த செயல் குறித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியதையடுத்து அமேசான் நிறுவனம் நூருல் அமீனுக்கு அவருடைய 70,900 ரூபாயை திருப்பி அனுப்பியுள்ளது. இது போல பல ஏமாத்து வேலைகள் ஆன்லைன் ஆர்டரில் நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.