ஆர்டர் செய்தது ரூ.76,000 லேப்டாப்.. வந்தது ரூ.3,000 ஸ்பீக்கர்! Flipkart -ஆல் மாணவருக்கு அதிர்ச்சி
பிளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்த ரூ.76,000 லேப்டாப்புக்கு பதில் ரூ.3,000 ஸ்பீக்கர் வந்ததால் கல்லூரி மாணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
லேப்டாப் பதில் ஸ்பீக்கர்
தற்போதைய காலத்தில் சிறிய பொருளில் இருந்து எந்த பொருளாக இருந்தாலும், நேரடியாக கடைக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பழக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்.
அந்தவகையில், அதர்வா கண்டேல்வால் என்ற கல்லூரி மாணவர் ஒருவர் ரூ.76,000 மதிப்புள்ள லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த லேப்டாப்பானது கடந்த 13 ஆம் திகதி டெலிவரி ஆக வேண்டிய நிலையில் 15 ஆம் திகதி வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மாணவர், பிளிப்கார்ட் சேவை மையத்தை அணுகிய போது உங்களுக்கு ஒரு OTP வரும் என்று கூறியுள்ளனர். பின்பு, OTP வந்ததும் அதர்வா ஆர்டரை பெற்றுக் கொண்டு அதனை திறந்து பார்த்த போது ரூ.3,000 மதிப்புள்ள ஸ்பீக்கர் இருப்பது தெரியவந்தது.
மாணவர் விரக்தி
இதனால், மாணவர் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது எங்களிடம் ரிட்டன் பாலிசி இல்லை என்று கூறினர்.
இதனால் விரக்தியடைந்த மாணவர் தனது சமூக வலைதள பக்கத்தில், இது தொடர்பாக என்னிடம் புகைப்படங்கள், வீடியோக்கள் இருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு பிளிப்கார்ட் தரப்பில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியாக செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதை சரிபடுத்துவதற்கு நீங்கள் எங்களை நம்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
? Unbelievable experience with @Flipkart! Ordered a Macbook M1 worth 76,000 INR, but received cheap speakers instead ?? Despite solid evidence of their own delivery executive mishandling the situation, they're denying refund under 'no returns' policy. All Proves Attached ?
— atharva khandelwal (@atharva_1913) August 21, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |