12 ஆண்டுகளுக்கு பின் திரும்ப வரும் ஆர்குட்? எதிர்பார்ப்பில் 90ஸ் கிட்ஸ்
orkut founder seeks support to bring it back: 90ஸ் கிட்ஸ்களின் பிரபல சமூக ஊடகமான ஆர்குட் தளத்தை மீண்டும் கொண்டு வர அதன் நிறுவனர் அழைப்பு விடுத்துள்ளார்.
மீண்டும் வரும் ஆர்குட்?
தற்போது சமூக ஊடகங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை ஆதிக்கம் செலுத்தினாலும் சமூக ஊடங்களின் தொடக்க காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது ஆர்குட்(orkut) தான்.

பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களின் முதல் சமூக ஊடக கணக்கு ஆர்குட்டில் தான் தொடங்கப்பட்டிருக்கும்.
கூகிள் நிறுவனத்தில் பணியாற்றிய வந்த ஆர்குட் புயுக்கொக்டென் (Orkut Büyükkökten), தன்னுடைய தனிப்பட்ட திட்டமாக ஆர்குட் தளத்தை உருவாக்கி 2004 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தார்.
2008 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பிரேசிலில் அதிகமான பார்வைகளை பெற்ற இணையதளமாக ஆர்குட் இருந்தது.
பேஸ்புக் , யூடியூப் , பிளாகர், கூகிள்+ போன்ற சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் கூகிள் 2014 ஆம் ஆண்டில் ஆர்குட் தளத்தை மூடியது.
இந்நிலையில், ஆர்குட் தளத்தை மீண்டும் கட்டமைப்பது குறித்து அதன் நிறுவனரான ஆர்குட் புயுக்கொக்டென் அழைப்பு விடுத்துள்ளார்.
The internet should help us find our people. Friendship. Community. A place to belong. Help me bring Orkut back in that spirit. Add your name at https://t.co/FO48fJMjEq and share your supporter card with someone you want to bring along. Love, Orkut https://t.co/zesE18Y3Fd
— Orkut Buyukkokten (@orkut) October 8, 2026
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இணையம் நம்மை போன்ற மனிதர்களை, நட்புகளை சமூகங்களை கண்டறிய வேண்டும். அந்த உணர்வுடன் ஆர்குட்டை மீண்டும் கொண்டுவர எனக்கு உதவுங்கள்" என.தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்குட் தளத்தில், தற்போதுள்ள சமூக ஊடகங்களை செயற்கை நுண்ணறிவு மற்றும் அல்காரிதங்கள், கட்டுப்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவு, அல்காரிதங்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கை, மற்றும் தளத்தில் செலவிடும் நேரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத நாம் நேசித்த ஒரு தளத்தை மீண்டும் கட்டமைக்க உதவுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது வரை 3.60 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். அதில் 68.5 சதவீதம் பேர் பிரேசிலை சேர்ந்தவர்கள்.