பைடன்- புடின் சந்திப்பு: ஒசாமாவின் சகோதரரின் மகள் செய்த செயல்! வெளியான வீடியோ
சுவிட்சர்லாந்தில் பைடன்-புடின் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரரின் மகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சந்திப்பில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேரம் நடந்த பேச்சுவார்ததை சுமுகமாக முடிந்தது. சந்திப்புக்கு பின் இரு தலைவர்களும் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், பைடன்-புடின் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒசாமாவின் மூத்த சகோதரர் Yeslam bin Ladin-ன் மகள் Noor bin Ladin ஜெனீவா ஏரியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஏரியில் படகு ஒன்றில் பயணித்த Noor bin Ladin, ‘டிரம்ப் வென்றார்’ என்ற போஸ்டரை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டார்.
Noor bin Ladin அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் போராட்டத்தில் ஈடுபட்டதை உறுதி செய்த Noor bin Ladin, அவரது ஆதாரமற்ற அரசியல் நம்பிக்கை காரணமாக அவரை கைது செய்வதாக பொலிசார் மிரட்டியதாக தெரிவித்தார்.
Today in WTF: Noor bin Laden, Osama bin Laden's niece, protests the Biden-Putin summit in Geneva with a "Trump Won" flag. pic.twitter.com/pwVW0rsh8A
— The Recount (@therecount) June 16, 2021
மேலும், அவரது போராட்டத்ததை தடுக்க இரண்டு பொலிஸ் படகுகள் மற்றும் ஒரு இராணுவ படகு அவரது படகை சுற்றி வளைத்ததாக Noor bin Ladin கூறினார்.