ஏர்போர்ட் மலேரியா: ஜேர்மனியில் கவனம் ஈர்த்துவரும் ஒரு விடயம்
An outbreak of malaria at Frankfurt Airport this summer has raised alarm: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் மலேரியா தொற்று பரவும் விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் ஏர்போர்ட் மலேரியா என்னும் விடயம் கவனம் ஈர்த்துவருகிறது.
ஏர்போர்ட் மலேரியா
ஜூலை மாதம் முதல், மத்திய ஜேர்மனியிலுள்ள ஃப்ராங்பர்ட் விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பரவும் மலேரியா தொற்றால் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டார்கள்!
இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஃப்ராங்பர்ட் விமான நிலைய ஊழியர்கள்.
இந்த தொற்று பரவல், ஏர்போர்ட் மலேரியா என்னும் நிகழ்வால் ஏற்படுவதாக ஃப்ராங்பர்ட் சுகாதாரத்துறை நம்புகிறது.
அதாவது, மலேரியா தொற்று பரவல் அதிகம் உள்ள ஒரு நாட்டுக்குச் செல்லும் விமானங்களிலிருக்கும் பயணிகளின் உடைமைகளில் அமர்ந்துகொள்ளும் மலேரியா கிருமிகளைக் கொண்ட கொசுக்கள், அந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பரவி, அங்குள்ளவர்களைக் கடிப்பதால் இந்த மலேரியா தொற்று அங்குள்ளவர்களுக்கு பரவுகிறது.

ஃப்ராங்பர்ட்டில் பரவும் மலேரியா தொற்று, Plasmodium falciparum என்னும் கிருமி மூலம் பரவும் அபாயகரமான, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், Malaria tropica என்னும் ஒருவகை தொற்று ஆகும்.
இந்நிலையில், ஃப்ராங்பர்ட் விமான நிலையத்துக்கு அருகில் வாழும் மக்கள் யாருக்காவது மலேரியா தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணூகுமாறு ஃப்ராங்பர்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.