இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் சட்டவிரோதமாக வாழ்ந்த நைஜீரியர்: நாடு கடத்திய அதிகாரிகள்
இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த நைஜீரிய நாட்டவர் வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இந்தியாவில் வாழ்ந்த நைஜீரியர்
நைஜீரியாவின் இமோ மாநிலத்தை சேர்ந்த ஜான்கென்னடி சுக்வுமேகா ஒகோரோ என்ற 43 வயது நபர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த நிலையில் அவர் வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்டுள்ளார்.
வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துடன் இணைந்து ஹைதராபாத் போதைப்பொருள் அமலாக்கப் பிரிவு, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை இலக்காக கொண்டு நடத்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நாடு கடத்தல் செய்யப்பட்டுள்ளது.

சுக்வுமேகா ஒகோரோ கடந்த 2012ம் ஆண்டு வணிக விசா மூலம் முதல் முறையாக இந்தியாவில் உள்ள மும்பைக்கு வந்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், அவரது விசா காலம் நிறைவடைந்து பல ஆண்டுகள் ஆகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சுக்வுமேகா ஒகோரோ கைது செய்யப்படும் போது அவரிடம் எந்தவொரு போதைப் பொருளும் இல்லை என்றாலும், அவர் பணம் ஈட்டுவதற்கான எளிய வழியாக கருதப்படும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று சந்தேகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |