துப்பாக்கி முனையில் 215 மாணவர்கள் கடத்தல் - ஒரே வாரத்தில் 2வது நிகழ்வு
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 215 மாணவ மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் கடத்தல்
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 17 ஆம் திகதி அதிகாலையில், கெப்பி மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் நுழைந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அங்கிருந்த 25 மாணவ,மாணவிகளை கடத்தி சென்றது.

இந்த சம்பவத்தின் போது, தடுக்க முயன்ற பாதுகாவலர் மற்றும் ஆசிரியர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஒரு நபரை மீட்பதற்கு 100 மில்லியன் நைரா(இந்திய மதிப்பில் ரூ.61.85 லட்சம்) கோரியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு கடத்தல் சம்பவம் நைஜீரியாவில் நடைபெற்றுள்ளது.
அதிகாலை 2 மணியளவில், நைஜர் மாகாணத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியின் உள்ளே நுழைந்த ஆயுதமேந்திய கும்பல் 215 மாணவ மாணவிகள் மற்றும் 12 ஆசிரியர்களை கடத்தி சென்றுள்ளனர்.

குழந்தைகள் கடத்தப்பட்டது குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் பதட்டமடைந்து பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.

கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க அரசு நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக நைஜீரியா கிறிஸ்தவ சங்கத்தின் (CAN) நைஜர் மாநில தலைவர் மோஸ்ட். ரெவரெண்ட் புலஸ் டௌவா யோஹன்னா தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து உளவுத்துறை எச்சரித்ததன் காரணமாக முன்னதாகவே பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அரசின் உத்தரவையும் மீறி, முன் அனுமதி பெறாமல் பள்ளி திறக்கப்பட்டதே மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் கடத்தப்பட்டதற்கு காரணம் என பள்ளி நிர்வாகம் மீது அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க அரசு ஒவ்வொரு கருவியையும் செயல்படுத்தும் என ஜனாதிபதி போலா டினுபு உறுதி அளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |