3 மாதங்களில்..,சுமார் 600 பெண்கள் படுகொலை: தென்னாப்பிரிக்காவில் கடும் நெருக்கடி
Over 3 months Nearly 600 Female Homicides in South Africa: வெறும் 3 மாதங்களில் சுமார் 600 பெண்கள் தென்னாப்பிரிக்காவில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள்
தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 581 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் குற்றவியல் அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
மூன்று மாதங்களில் பதிவான இந்த கொலைகளில் ஜோகன்னஸ்பர்க் நகரை உள்ளடக்கிய Gauteng மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 131 பெண்களை கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜோகன்னஸ்பர்க் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 13 பெண்களின் உடல்கள் அரை நிர்வாணமாகவும், பலத்த காயங்களுடனும் வீசப்பட்டிருந்தது.
பெண்கள் இவ்வாறு அடுத்தடுத்து கொலை செய்யப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கடுமையான அழுத்தம் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த வாரமும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன, Free State மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பெண்கள் மற்றும் 1 குழந்தை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் மட்டும் தென்னாப்பிரிக்காவில் 5,590 கொலைகள் நடைபெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை விட 204 வழக்குகள் குறைவானது ஆகும்.
இருப்பினும் சராசரியாக நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 60 கொலைகள் நடைபெறுகின்றன என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.