ராணுவ தளத்தை ஏவுகணைகளால் சிதைத்த ரஷ்யா... 70க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொன்று குவிப்பு
உக்ரைன் ராணுவ தளம் மீது ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
திங்களன்று உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தின் ஒக்திர்கா நகரில் உள்ள இராணுவ தளத்தின் மீது ரஷ்ய துருப்புக்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 70 க்கும் மேற்பட்ட உக்ரைன் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக பிராந்திய ஆளுநர் Dmytro Zhyvytskyy தெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்ய படைகள் சுமி பிராந்தியத்தை முற்றுகையிட்டு வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
தாக்குதல் நடந்த இடத்தில், இடிபாடுகளில் யாரேனும் உயிர் பிழைத்துள்ளார்களா என மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
தாக்குதலில் உயிரிழந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக உக்ரைன் பாராளுமன்றம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
??Russians ?? practically razed Okhtyrka to the ground, but could not capture it. (28/02/2022) pic.twitter.com/4c5PEknWt2
— Special Operators (@Spec_Operators) February 28, 2022
மேலும், Grad ஏவுகணைகளால் அவர்கள் கொல்லப்பட்டதாக பாராளுமன்றம் குறிப்பிட்டுள்ளது.
‼️ В Охтирці ворожі «гради» вдарили по військовій частині. Загинуло 70 військовослужбовців.
— Верховна Рада України (@verkhovna_rada) March 1, 2022
Про це повідомив голова Сумської ОДА Дмитро Живицький.
Вічна пам‘ять та слава Героям України?