8000 அப்பாவி உக்ரேனிய மக்களை கொன்று குவித்த ரஷ்யா: ஐ.நா
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பின்பு கிட்டதட்ட 8000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதலால் உயிரழப்பு
'சிறப்பு இராணுவ நடவடிக்கை' என்ற பெயரில் ரஷ்யா 2022 பிப்ரவரி 24-ஆம் திகதி உக்ரைனுக்குள் நுழைந்து அதன் தாக்குதலை தொடங்கியது. அதன்படி, உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடங்கி சரியாக ஒரு வருடம் நிறைவடையுள்ளது.
இப்போரில் வெடிகுண்டு வீசியதில் ஆயிரக்கணக்கான உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டதோடு அல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.
Reuters
இந்த நிலையில் ஐ நாவின் மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய கணக்கெடுப்பின்படி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து 7,199 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதில் 90% பேர் வெடிக்குண்டு தாக்குதலில் உயிரழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கிலடப்படாத மரணங்கள்
உக்ரைன் நாட்டில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஊழியர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து அங்கு நடக்கும் இறப்புகளை கணக்கெடுக்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்கள் கூறுவது அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு இவ்வளவு தான் என்றாலும் கணக்கில் இடமுடியாத இறப்பின் வீகிதம் இன்னும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
தற்போது ரஷ்யா, உக்ரெனுக்கு இடையேயான போர் இன்னும் வலுபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.