900 பள்ளி மாணவிகள் விஷத்தை உட்கொண்ட மர்மம்! ஈரானில் என்ன நடக்கிறது?

Iran
By Ragavan Mar 06, 2023 08:18 AM GMT
Report

ஈரானில் இதுவரை 900-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் விஷம் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகள் மரமான முறையில் விஷத்தை உட்கொண்டுள்ளதால் ஈரானில் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

900 பள்ளி மாணவிகள்

இதுவரை குறைந்தது 900 பள்ளி மாணவிகள் விஷம் உட்கொண்டுள்ளனர். நவம்பர் 30-ஆம் திகதி கோம் நகரில் முதல் முறையாக ஒரு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 பள்ளி மாணவிகள் நச்சுத்தன்மை ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதில், பெரும்பாலானவர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டனர், ஆனால் பல நாட்கள் அவர்களை கண்காணிக்கப்பட வேண்டியிருந்தது.

900 பள்ளி மாணவிகள் விஷத்தை உட்கொண்ட மர்மம்! ஈரானில் என்ன நடக்கிறது? | Over 900 Iranian Schoolgirls Poisoned MysteriousAFP - Representative Image

அதன்பிறகு ஈரானில் பல நகரங்களில் பள்ளி மாணவிகள் விஷம் உட்கொண்டதாக பல வழக்குகள் வெளிவந்தன. கடந்த வாரம் செவ்வாய்கிழமை தலைநகர் தெஹ்ரானில் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.

இன்னும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த சிறுமிகளுக்கு எப்படி விஷம் கொடுக்கப்படுகிறது என்பது குறித்து இதுவரை எந்த தெளிவும் இல்லை. விஷம் குடித்த மாணவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை, ஆனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக பல நகரங்கள் இந்த சிக்கலைப் புகாரளித்துள்ளதால் இது நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மர்ம விஷத்தின் அறிகுறிகள்

மாணவிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கு முன்பு விசித்திரமான வாசனையை எதிர்கொண்டதாக புகாரளித்தனர், அவை அழுகிய ஆரஞ்சு பழம் (Tangerine) அல்லது வலுவான வாசனை திரவியம் போன்ற வாசனை இருந்ததாக கூறினர்.

பாதிக்கப்படுவதற்கு முன்பு பள்ளி வளாகத்தில் விசித்திரமான பொருட்கள் வீசப்பட்டதைக் கண்டதாகக் மாணவிகள் கூறிதாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அறிகுறிகளில் தலைவலி மற்றும் குமட்டல் ஆகியவை அடங்கும், மேலும் சில மாணவர்கள் தங்கள் கைகால்களில் தற்காலிக முடக்கத்தை அனுபவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

900 பள்ளி மாணவிகள் விஷத்தை உட்கொண்ட மர்மம்! ஈரானில் என்ன நடக்கிறது? | Over 900 Iranian Schoolgirls Poisoned MysteriousPublic domain

ஈரானின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பொறுப்பான துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி (Younes Panahi) பிப்ரவரி 26 அன்று, இந்த விஷங்கள் இயற்கையில் "ரசாயனம்" என்று கூறினார், ஆனால் போரில் பயன்படுத்தப்படும் கலவை இரசாயனங்கள் அல்ல மற்றும் அறிகுறிகள் தொற்று இல்லை என்று IRNA தெரிவித்துள்ளது.

ஐஆர்என்ஏவின் கூற்றுப்படி, பெண்கள் பள்ளிகளை குறிவைத்து மூடுவதற்கான வேண்டுமென்றே நச்சுத்தன்மை முயற்சிகள் என்று தோன்றுகிறது என்று பனாஹி கூறினார்.

விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

இது குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்றக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. சில பள்ளிகளில் பயன்படுத்தப்படும் விஷத்தில் நைட்ரஜன் வாயு இருப்பது கண்டறியப்பட்டதாக குழு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளை தொடர்ந்து கண்காணிக்க உள்துறை அமைச்சகத்துக்கு அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) புதன்கிழமை உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று ஈரானின் காவல்துறைத் தலைவர் அஹ்மத் ரெசா ராடன் கூறினார்.

இதனை வெளிநாட்டு எதிரிகள் ஈரானை கொச்சைப்படுத்தும் முயற்சியில் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று பல அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US