அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? இந்த அறிகுறிகள் தென்பட்டால் அஜாக்கிரதையாக இருக்காதீங்க
இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை கூட்ட, குறைக்க என்று கடினமான உடற்பயிற்சி முறைகளையே பின்பற்றி வருகின்றார்கள்.
உண்மையில் அளவுக்கு அதிகமாக, கடுயைான உடற்பயற்சிகள் மேற்கொள்ளும் முன்பாக, உங்களுடைய இதய ஆரோக்கியம் குறித்து கவனமும் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்கின்றனவர்களுக்கு உடல் சார்ந்த பல பிரச்சினைகளை சில அறிகுறிகள் வாயிலாக வெளிக்காட்டும்.
அதைப் பலரும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் பல பிரச்சினைகளை பின்னடைவில் சந்திக்க நேரிடும்.
அந்தவகையில் அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சியை செய்தால் அப்படி என்னென்ன அறிகுறிகள் தென்பட்டால் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
- உடற்பயிற்சி செய்யும்போது தலை அதிக பாரத்துடனோ அல்லது மிக மிக லேசாகவோ இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும்.
- அளவுக்கு அதிகமாக ஹைபர் டென்ஷன் பிரச்சினை உடையவர்கள் கடினமான உடற்பயிற்சிகளுக்குள் இறங்குவதற்கு முன்னதாக ஹைபர் உங்களுடைய ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- ஒருவேளை உங்களுடைய பரம்பரையில் யாருக்கேனும் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் பிறகு இதய நோய் இருப்பது தெரிய வந்திருந்தால் அந்த மரபணு உங்களுடைய மரபணுவோடு தொடர்புடையதாக இருப்பின் உங்களுக்கும் அந்த ஆபத்து வரலாம். அதனால் முன்கூட்டியே பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.
- உடற்பயிற்சியின் போது நெஞ்சில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டாலோ அல்லது சுவாசம் சீரானதாக இல்லாமல் இருந்தாலோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- உடலை வலுவாக்க, பயற்சியின் வேகத்தை அதிகரிக்க எனர்ஜி மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.