ட்ரம்பின் அந்த திட்டத்தில் ரஷ்யா ஒருபோதும் தலையிடாது: புடினின் திடீர் மனம் மாற்றம்
கிரீன்லாந்து தொடர்பில் ட்ரம்பின் திட்டத்திற்கு ரஷ்யா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்காது என விளாடிமிர் புடின் கூறியிருப்பது இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகிறது.
தலைமையை வலுப்படுத்த
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, பனாமா கால்வாயை அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், கனடாவை 51வது மாகாணமாக அறிவிக்க வேண்டும்,
காஸாவை அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஒப்படைக்க வேண்டும், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் கிரீன்லாந்து விவகாரத்தில் அவர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதும் அமெரிக்காவின் சமீபத்திய நகர்வுகளில் இருந்து உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே உள்ள மிகப்பெரிய நகரமான மர்மன்ஸ்க்குக்கு ஜனாதிபதி புடின் இன்று விஜயம் செய்தார். அங்கு அவர் ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் உலகளாவிய தலைமையை வலுப்படுத்த உறுதியளித்தார்.

ஆர்க்டிக் போர் உறுதி... ட்ரம்பின் கனவுத் திட்டத்திற்கு எதிர்பாராத மிரட்டல் விடுத்த விளாடிமிர் புடின்
மேலும், கிரீன்லாந்தை இணைத்து அதை அமெரிக்கப் பிரதேசமாக மாற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் திட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றே விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் குறித்துப் பேசுகையில், கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்காவின் திட்டங்கள் தீவிரமானவை என்றார்.
நெருக்கமான உறவுகளை
மேலும், அமெரிக்கா ஆர்க்டிக் பிராந்தியத்தில் அதன் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை முறையாகத் தொடர்ந்து பின்பற்றும் என்பது தெளிவாகிறது என்றும் புடின் விளக்கமளித்துள்ளார்.
மட்டுமின்றி, ட்ரம்பின் இந்த பிராந்திய விரிவாக்க முடிவுகளை விமர்சிப்பதற்கு அல்லது கண்டிப்பதற்கு பதிலாக, புடின் கிரீன்லாந்தை அதன் தலைவிதிக்கே விட்டுவிட்டார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் முடிவெடுக்க வேண்டும், ரஷ்யாவிற்கு அதில் பங்கில்லை என்றே புடின் குறிப்பிட்டுள்ளார். கிரீன்லாந்து தொடர்பில் புடினின் இந்த திடீர் மனம் மாற்றம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யாவும் அமெரிக்காவும் ட்ரம்பின் ஆட்சியின் கீழ் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், புடினின் இந்த ஒப்புதல் என்பது கவனம் பெறுகிறது.
இதற்கிடையில், கிரீன்லாந்து நிர்வாகம் விற்பனைக்கு இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. டென்மார்க்கும் அமெரிக்காவின் திட்டத்தை நிராகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |