119 ஆண்டுகளுக்கு பிற்கு... நூலகத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட புத்தகம்
அமெரிக்காவின் Massachusetts பொது நூலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட நூல் ஒன்று, 119 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாக அளிக்கப்பட்ட
1882ல் வெளியிடப்பட்ட James Clerk Maxwell என்பவர் எழுதிய An Elementary Treatise on Electricity என்ற அந்த நூல் தான் தற்போது திரும்பியுள்ளது.
மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழக நூலகங்களில் அரிதாக நூல்களை பராமரிக்கும் ஊழியர் ஒருவர், நன்கொடையாக அளிக்கப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான அறிவியல் புத்தகங்களை ஆய்வு செய்துள்ளார்.
Credit: facebook
அப்போது தான் அவருக்கு, குறிப்பிட்ட புத்தகம் ஒன்று, தற்போதும் நூலகத்திற்கு சொந்தமானது என்பதை கண்டறிந்தார். உடனடியாக அந்த ஊழியர் நியூ பெட்ஃபோர்ட் இலவச பொது நூலகத்தை தொடர்பு கொண்டதுடன், அவர்களின் நூலை தபால் மூலமாக அனுப்பியும் வைத்துள்ளார்.
தற்போது நியூ பெட்ஃபோர்ட் இலவச பொது நூலகமானது இந்த தகவலை தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
பொதுவாக நியூ பெட்ஃபோர்ட் நூலகத்தில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 5-cent அபராதமாக வசூலித்துள்ளனர்.
அப்படியெனில், 119 ஆண்டுகளுக்கான மொத்த தொகை என்பது 2,100 டொலர் என்றே கூறுகின்றனர்.