நள்ளிரவில் நடைபெற்ற கொடூர தாக்குதல்: பாரிய இழப்பை சந்தித்த உக்ரைன் நகரம்
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய கொடூரமாக தாக்குதலால் கட்டிடங்கள் சேதமடைந்ததோடு, இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நள்ளிரவில் தாக்குதல்
உக்ரைன் நகரங்கள் மீது நேற்று நள்ளிரவில் ரஷ்யாவால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், நகரங்களின் கட்டிடங்கள் பாரிய சேதம் அடைந்துள்ளன.
@reuters
ரஷ்யாவின் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் மையப்பகுதி மற்றும் தெற்கு மாகாணங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும் உக்ரைன் தலைநகர் கிய்விலிருந்து ஊடகம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
’ஒரு இளம்பெண் உட்பட மூன்று வயது குழந்தை உயிரிழந்திருப்பதாக டினிப்ரோ நகரின் மேயர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் இழப்பை பற்றி அவர் கூடுதல் தகவல் எதுவும் அளிக்கவில்லை என தெரிகிறது.
வான்வெளி தாக்குதல்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் நகரெங்கும் கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதை காட்டுகின்றன.
உக்ரைன் தலைநகரான கிய்வ் ரஷ்யா நடத்திய வான் வெளி தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்பு மூலம் பாரிய இழப்பை சந்தித்துள்ளதாக, உக்ரைன் தரப்பில் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் கிய்வ் நகரில் ஏற்பட்ட இழப்பை பற்றி இன்னும் சரியான தகவல்கள் வெளியாகவில்லை. பாதுகாப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக அந்நகரின் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
@reuters
இதனை தொடர்ந்து உக்ரேனியப் படைகள் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து டாங்கிகள் உட்பட, புதிய இராணுவ உபகரணங்களுடன் விரைவில் தங்களது தாக்குதலைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.