மூன்றாம் உலகப்போர் வெடித்தால் புடின் தோற்றுப்போவார்: பிரித்தானிய ராணுவ தலைவர் கருத்து
மூன்றாம் உலகப்போர் வெடித்தால், போரில் புடின் தோற்றுப்போவார் என பிரித்தானிய ராணுவ தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகப்போர் வெடித்தால் புடின் தோற்றுப்போவார்
மூன்றாம் உலகப்போர் வெடித்தால், போரில் புடின் தோற்றுப்போவார் என்பது அவருக்கே தெரியும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய ஆயுதப்படைகளின் தலைவரான Admiral Sir Tony Radakin.
போர் வழக்கமாக நடைபெறும் வகையிலான போராக இருந்தாலும் சரி, அணு ஆயுதப்போராக இருந்தாலும் சரி, பதிலடி பயங்கரமாக இருக்கும் என்பதும் ரஷ்யாவுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய ஆயுதப்படைகளின் தலைவரான Admiral Sir Tony Radakin.
மேலும், ரஷ்யாவின் அச்சுறுத்தல், சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை அதிகரிப்பு, வடகொரியாவின் ஏவுகணைத் திட்டங்கள் அதிகரிப்பு மற்றும் அணுகுண்டு தயாரிக்கும் ஈரானின் முயற்சி என உலகம் மூன்றாவது அணு யுகத்திற்குள் நுழைந்துவிட்டது என்கிறார் அவர்.
எப்படியிருந்தாலும், பிரித்தானியாவையோ அல்லது நேட்டோவையோ ரஷ்யா நேரடியாக தாக்குவதற்கான அல்லது ஊடுருவுவதற்கான வாய்ப்புகள் குறைவே என்றும் கூறியுள்ளார் Sir Tony Radakin.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |