நீதிமன்ற கொலை விசாரணையில் அழைக்காத சாட்சியாக நுழைந்த ஆந்தை! அலறி அடித்து ஓடிய மக்கள்
கொலை விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நீதிமன்ற அறைக்குள் ஆந்தை ஒன்று நுழைந்ததை தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் கத்திக் கொண்டு வெளியே ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்ற வளாகத்திற்குள் ஆந்தை
தென்னாப்பிரிக்காவின் ப்ராக்பானில்(Brakpan) உள்ள நீதிமன்றத்தில் கொலை விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும் போது, அழையாத விருந்தினராக ஆந்தை ஒன்று நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியால் பெரும் பதற்றம் எழுந்தது.
கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள துளை வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வித்தியாசமான பறவை இறுதியில் ஆந்தை என உறுதிப்படுத்தப்பட்டது.
cotswold
இதற்கிடையில் விசாரணையின் போது நுழைந்த ஆந்தையை கண்டு அங்கிருந்த மக்கள் கத்திக் கொண்டு அறையிலிருந்து வெளியேறியதால் சிறிது நேரத்திற்கு பதற்றம் ஏற்பட்டது.
ஆந்தையை மீட்ட குழுவினர்
இந்நிலையில் ப்ராக்பானில் உள்ள நீதிமன்ற அறையில் இருந்து ஆந்தையை மீட்க வேண்டும் என ஆந்தை மீட்பு மையத்திற்கு ப்ராக்பன் SPCA வேண்டுகோள் முன்வைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆந்தை மீட்புக் குழு, சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு ஆந்தையை பத்திரமாக மீட்டனர்.
பிடிபட்ட ஆந்தையுடன் புகைப்படம் ஒன்றை ஆந்தை மீட்பு குழு வெளியிட்டுள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்ட விருப்பங்கள் மற்றும் பல வேடிக்கையான கருத்துகளையும் இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.