சொந்த தொழில் தொடங்கணுமா.. அரசு வழங்கும் ரூ.31 லட்சம் மானியத்தை பயன்படுத்துங்க
இந்திய மாநிலம், உத்தர பிரதேச அரசு பால் பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
நந்தினி கிரிஷக் சம்ரித்தி யோஜனா திட்டம்
நந்தினி கிரிஷக் சம்ரித்தி யோஜனா திட்டமானது கால்நடைகளின் இனத்தை அதிகரிக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்த திட்டமானது உயர்தர கறவை மாடுகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக பயனாளிகளுக்கு தலா 25 கறவை மாடுகள் கொண்ட 35 யூனிட்கள் அமைக்க மானியம் வழங்கப்படும். மாடுகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக மூன்று கட்டங்களாக மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் சாஹிவால், கிர், தார்பார்கர், கங்காதிரி வகை கறவை மாடுகள் மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.31 லட்சம் மானியம்
25 கறவை மாடுகள் கொண்ட பால் பண்ணை அமைக்க ரூ.62,50,000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், 50 சதவீத மானியமாக ரூ.31,25,000 வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேரும் பயனாளிகளுக்கு 3 வருட மாடு வளர்ப்பு அனுபவம் இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், மாடு வளர்க்க 0.5 ஏக்கர் நிலமும், பசுக்களுடைய தீவனத்திற்காக 1.5 ஏக்கர் நிலமும் கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கான நிலங்கள் சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கு எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, கம்தேனு, மினி கம்தேனு மற்றும் மைக்ரோ கம்தேனு திட்டங்களின் பயனாளிகள் நந்தினி கிரிஷக் சம்ரித்தி யோஜனாவின் பயன்களை பெற முடியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |