ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மட்டும் 604... ரூ 4,000 கோடி மதிப்பில்லான வாகனங்கள்: யார் இந்த கோடீஸ்வரர்
சுமார் 4,000 கோடி மதிப்பிலான கார்களை சொந்தமாக்கியுள்ள புருனேயின் சுல்தான் ஹசனல் போல்கியா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உலக கோடீஸ்வரர்களில்
புருனே அரசரின் கார் சேகரிப்பு என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றே கூறுகின்றனர். மேலும் 1990களில் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி கார்கள் வாங்கப்பட்டதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு புருனே சுல்தான் மற்றும் அவரது குடும்பத்தினரே கைவசம் வைத்துள்ளனர்.
மட்டுமின்றி, உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக அடையாளம் காணப்படும் சுல்தான் ஹசனல் போல்கியா, 1984 முதல் புருனே நாட்டின் பிரதமராகவும் அரசராகவும் சேவை செய்து வருகிறார்.
இரண்டாம் எலிசபெத் ராணியாருக்கு பிறகு அரச பொறுப்பில் மிக நீண்ட காலமாக இருப்பவர் சுல்தான் ஹசனல் போல்கியா. Istana Nurul Iman எனப்படும் இவரது அரண்மனையானது 1984ல் கட்டி முடிக்கப்பட்டது.
சொத்து மதிப்பு 30 பில்லியன்
உலகின் மிகப் பெரிய அரண்மனை என கூறப்படும் இதன் பரப்பளவு மட்டும் 2 மில்லியன் சதுர அடி என்கிறார்கள். இந்த அரண்மனையின் முகப்பில் அமைந்துள்ள குவிமாடமானது 22 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது.
மொத்த மதிப்பு ரூ 2550 கோடி என்றே கூறப்படுகிறது. சுல்தானிடம் சுமார் 92 கோடி மதிப்பிலான அபூர்வ வைர கற்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். Istana Nurul Iman அரண்மனையில் 5 நீச்சல் குளங்களும் 1700 அறைகளும், குதிரைகளுக்கான குளிரூட்டப்பட்ட 200 கொட்டகைகளும் அமைந்துள்ளது.
சுல்தான் ஹசனல் போல்கியாவிடம் 300 ஃபெராரி கார்களும் 604 ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் உள்ளன. அத்துடன் உலகின் உயர்தர பிராண்டு கார்கள் பல இவரது 100 ஆடம்பரமான கேரேஜ்களில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இவரது சொத்து மதிப்பு என்பது 30 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |