இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட 39 மூதாதையர் மண்டை ஓடுகள்: பிரித்தானிய அருங்காட்சியகம் நடவடிக்கை
Oxford Returns 39 naga ancestral remains to India's நாகாலாந்து மக்களின் 39 மூதாதையர்களின் மண்டையோடுகளை பிரித்தானிய அருங்காட்சியகம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட நாகா இனத்தின் மனித எச்சங்கள்
பிரிட்டிஷ் காலனி வாத ஆட்சியின் போது நாகாலாந்து மக்களிடம் இருந்து கொண்டு செல்லப்பட்ட 39 மூதாதையர்களின் உடல் எச்சங்களை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Pitt Rivers அருங்காட்சியகம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
வரலாற்றுப் பிழையை சரி செய்யும் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, 39 மூதாதையர்களின் உடல் எச்சங்களும் நாகாலாந்து சமூகப் பிரதிநிதிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இருந்து கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட குழு இந்த ஒப்படைப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆக்ஸ்போர்டு நகருக்கு சென்றிருந்தனர்.
Pitt Rivers அருங்காட்சியகத்தினால் ஒப்படைக்கப்பட்ட மனித எச்சங்களில் பெரும்பாலானவை மனித மண்டை ஓடுகள் ஆகும். இவை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அவை நாகாலாந்தின் கூட்டமைப்பு நினைவு பூங்காவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அத்துடன் அடக்கம் செய்யப்படும் மனித எச்சங்களுக்கு தகுந்த மரியாதையுடன் வசிப்பிடம் அமைக்க பழங்குடியினத் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களை தாண்டி இந்த நிகழ்வானது நடந்துள்ளது. இவை அடுத்த தலைமுறைகளுக்கு கூறப்படும் கதைகளில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக இருக்கும் என்று அருங்காட்சியகத்தின் இயக்குநர் லாரா வான் புரோகோவன் தெரிவித்துள்ளார்.
Pitt Rivers அருங்காட்சியகத்தில் 6000க்கும் மேற்பட்ட நாகாலாந்து மக்களின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய கலைப்பொருட்கள் சேமிப்பாக வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.