உக்ரைன் போரில் பங்கேற்க புறப்பட்ட 9 ஜிம்பாப்வே இளைஞர்: கைது செய்த தென் ஆப்பிரிக்க பொலிஸார்
9 Zimbabwean men arrested for attempting to participate Ukraine war: ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்க முயற்சித்த 9 ஜிம்பாப்வே இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 ஜிம்பாப்வே இளைஞர் கைது
ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வே நாட்டில் இருந்து வெளிநாடு செல்ல திட்டமிட்ட 9 இளைஞர்களை தென் ஆப்பிரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தென் ஆப்பிரிக்க காவல்துறையினர், இன்டர்போல் அதிகாரிகளுடன் இணைந்து ஜோகன்னஸ்பர்க் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கினர்.

இந்த அதிரடி சோதனையின் இறுதியில் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் 5 பேர் OR Tambo சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 4 பேர் Bruma பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது பிடிப்பட்டனர் என்று தென் ஆப்பிரிக்க காவல்துறையினர் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 9 பேரும் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் இறுதியாக செல்ல திட்டமிட்டு இருந்தார்கள் என்பது குறித்து எந்தவொரு துல்லியமான தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
9 பேரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர் என அரசு வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.