இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் Omicron பாதிப்பு: புதிய ஆய்வில் வெளியான தகவல்
2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் Omicron பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவை தொடர்ந்து Omicron தொற்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து உலக விஞ்ஞானிகள் Omicron குறித்து பல தரப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் Oxford-AstraZeneca மற்றும் Pfizer-BioNTech தடுப்பூசிகள் மூலம் Omicron மாறுபாட்டை தடுக்க முடியாது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை பெற்ற 28 நபர்களின் இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.
அந்த ஆய்வில், கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியால் ஆன்டிபாடிகளின் அளவு கணிசமாக குறைவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும் Omicron மாறுபாடு தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் உட்பட அனைவருக்கு பரவும் என்று ஆய்வில் வெளியாகியுள்ளது.
இருந்தாலும் தடுப்பூசி போடப்பட்ட மக்களை இந்த வைரஸ் கடுமையாக பாதிக்க கூடிய சாத்திய கூறுகளும் தற்போது இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முன்னணி எழுத்தாளர் பேராசிரியர் கவின் ஸ்க்ரேட்டன் இதுகுறித்து கூறியதாவது, தடுப்பூசி உருவாக்குபவர்களுக்கு தங்கள் மக்களை பாதுகாக்க இந்த ஆய்வு உதவியாக இருக்கும்.
தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே கடுமையான நோய் அல்லது இறப்புக்கான ஆபத்து அதிகரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.