ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து: பாகிஸ்தானில் 10 பேர் உயிரிழப்பு
Oxygen cylinder explodes in ambulance 10 persons killed: பாகிஸ்தானில் ஆம்புலன்ஸுக்குள் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் வரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து
பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸுக்குள் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் பெண்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நாகர்பார்க்கர் பகுதியில் செயல்பட்டு வந்த அடிப்படை சுகாதார மையத்தில் இருந்து சில நோயாளிகள் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நோயாளிகளின் அவசர வசதிக்காக ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாற்றி வைக்க முயன்ற போது அவை எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது.
சிலிண்டர் வெடித்த வேகத்தில் ஆம்புலன்ஸ் முழுவதும் தீ பரவியது இதனால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைக்காக காராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரம் இந்த விபத்து தொடர்பான விவரங்களை ஆராய வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.