இந்தியாவில் மீறப்படும் மனித உரிமைகள்.. இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு? கொந்தளித்த ஜேர்மனி கால்பந்து நட்சத்திரம்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இந்தியாவில் மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது என ஜேர்மனியின் முன்னாள் கால்பந்து வீரர் ஓசில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் சாதி, மத வெறுப்பு மோதல்கள் அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறுவது தொடர்பாக அமெரிக்க அரசு நிறுவனமான மத சுதந்திரங்களுக்கான அமைப்பு கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனால் சர்வதேச அளவில் இந்த விடயம் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஜேர்மனியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் மெசுத் ஓசில் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக Lailat al-Qadr புனித இரவில் பிரார்த்தனை செய்வோம். இந்த வெட்கக்கேடான சூழ்நிலைக்கான விழிப்புணர்வை பரப்புவோம்! உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட தேசம் என்று அழைக்கப்படும் நாட்டில் மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது? அமைதியை தகர்ப்போம்' என பதிவிட்டுள்ளார்.
Praying during the holy night of Lailat al-Qadr for the safety and well-being of our Muslim brothers and sisters in India?????Let's spread awareness to this shameful situation! What is happening to the human rights in the so-called largest democracy in the world?#BreakTheSilence pic.twitter.com/pkS7o1cHV5
— Mesut Özil (@MesutOzil1088) April 27, 2022
முன்னதாக ரஷ்யா-உக்ரைன் போரின் தொடக்கத்தின் போது உலக அமைதி குறித்து ஒரு செய்தியை ஓசில் வெளியிட்டிருந்தார்.
மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச ஆய்வுகளை நடத்தி வரும் தொண்டு நிறுவனமான Amnesty International தனது கவலையை பதிவு செய்துள்ளது.
உலகளவில் நடைபெறும் இனப்படுகொலைகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் Genocide Watch என்ற நிறுவனம், இனப்படுகொலைகள் நடப்பதற்கான 10 கட்டங்களில் 8 கட்டங்களை இந்தியா தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.