மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்: மெக்சிகோவில் பரபரப்பு
மெக்சிகோவில் மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேயர் சுட்டுக் கொலை
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஒசாகாவில் உள்ள சான் மிகுவல் அமதித்லான் நகரின் மேயர் ஜோஸ் ஏஞ்சல் பிராவோ மார்டினெஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சான் மிகுவல் அமதித்லான் நகரில் கிட்டத்தட்ட 7000 மக்கள் வசிக்கும் நிலையில் அந்நகரின் மேயர் ஜோஸ் ஏஞ்சல் பிராவோ மார்டினெஸ் மிக்ஸ்டேகா பகுதியில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக மாநில பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேயர் மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதல் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், இதற்கான பின்னணி காரணம் மற்றும் தாக்குதலுக்கான நோக்கம் ஆகியவை குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Condeno enérgicamente el cobarde asesinato del presidente municipal de San Miguel Amatitlán, ocurrido este día en la región Mixteca.
— Salomón Jara Cruz (@salomonj) June 13, 2026
Expreso mis más sinceras condolencias y toda mi solidaridad a su familia, amistades, colaboradores y al pueblo de San Miguel Amatitlán. Lamentamos…
இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக கருதும் மாநில அரசு, மேயர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நகரை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாநில ஆளுநர் சலோமன் ஜாரா மேயர் கொல்லப்பட்டது தொடர்பாக தனது கண்டனத்தை X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |