தித்திக்கும் சுவையில் பால் பூரி.., இலகுவாக எப்படி செய்வது?
பால் பூரி என்பது பாரம்பரியமான தென்னிந்திய இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பால் பூரியை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பால் பூரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- நெய்- 1 ஸ்பூன்
- அரிசி- 1 ஸ்பூன்
- முந்திரி- 5
- பாதாம்- 6
- பிஸ்தா- 5
- கசகசா- 1 ஸ்பூன்
- பால்- 1 லிட்டர்
- தேங்காய்- ½ மூடி
- சர்க்கரை- ¾ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- குங்குமப்பூ- 5 இதழ்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து அரை மணி நேரம் மூடி போட்டு ஊறவைக்கவும்.
பின் ஒரு கிண்ணத்தில் அரிசி, முந்திரி, பாதாம், பிஸ்தா, கசகசா சேர்த்து சுடுதண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கலவை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணல் வைத்து அரைத்த கலவை, பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவைக்கவும்.
இதனைதொடர்ந்து இதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிணைந்து வைத்த கோதுமை மாவை வட்டமாக திரட்டி பூரி போல் சுட்டு எடுக்கவும்.
இறுதியாக பூரியில், காய்ச்சிய பால் சேர்த்து ஊறவைத்து எடுத்தால் சுவையான பால் பூரி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |