உடலிற்கு சத்தான பச்சைப்பயிறு லட்டு.., இலகுவாக எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் வலுவிற்கு இந்த சத்தான லட்டை சாப்பிடலாம்.
அந்தவகையில், உடலிற்கு சத்தான பச்சைப்பயிறு லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை பயிறு- ½ கப்
- முந்திரி- 12
- பாதாம்- 12
- வேர்க்கடலை- ¼ கப்
- ஏலக்காய்- 3
- நெய்- 2 ஸ்பூன்
- உலர் திராட்சை- ¼ கப்
- வெல்லம்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் பச்சைப்பயிறை நன்கு கழுவி இரவு முழுக்க ஊறவைத்து துணியில் கட்டி 2 நாட்கள் அப்படியே வைத்தால் நன்கு முளை வந்துவிடும்.
அடுத்து இதனை ஒரு வாணலில் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைதொடர்ந்து அதே வாணலில் முந்திரி, பாதாம், ஏலக்காய் மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து வாணலில் இதில் நெய் சேர்த்து சூடானதும் அதில் திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பச்சைப்பயிறு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் வறுத்த முந்திரி, பாதாம், வேர்க்கடலை, வறுத்த திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை லட்டுவாக பிடித்தால் போதும் சத்தான பச்சைப்பயிறு லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |