அரைகுறை ஆடையில் ஆன்லைன் வகுப்பு... மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு! சிக்கிய ஆசிரியரின் அதிர்ச்சி வாக்குமூலம்
தமிழகத்தில் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தயார் உருவாக்கிய பத்ம சேஷாத்ரி பால பவன் என்ற சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு வணிகவியல் பிரிவில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.
மேலும் சில மாணவிகளிடம் செல்போன் எண்களை பெற்று அவர்களுக்கு வீடியோ கால் செய்வது போன்ற தொந்தரவுகளிலும் ராஜகோபால் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், ராஜகோபாலின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் துணிச்சலுடன் பதிவிட்டார்.
அத்தோடு மாணவிகளிடம் ராஜகோபல் ஆபாசமாக பேசுவது, ஆபாசமாக நடந்து கொள்வது தொடர்பான வாட்ஸ்ஆப் சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் அந்த மாணவி வெளியிட்டார்.
குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் நடந்த ஆன்லைன் வகுப்புகளில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரைகுறை ஆடையுடன் தோன்றி புகைப்படங்களும், இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை அடுத்து ராஜகோபாலால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக மேலும் சில மாணவிகளும் சமூக வலைதளங்களில் புகார்களை வெளியிட ஆரம்பித்தனர். கடந்த காலங்களில் கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பயின்ற மாணவிகளும் ராஜகோபாலால் தாங்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தங்கள் மோசமான அனுபவங்களை பகிர்ந்தனர்.
மேலும் பத்மஷேசாத்ரி பள்ளியில் பயின்ற பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏற்கனவே ராஜகோபாலன் குறித்து அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில், இது குறித்து குறிப்பிட்டதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலஷ்மி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஆனால் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொலிசார் இன்று மாலை 4 மணியில் இருந்து ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினார்கள்.
The sexual harassment allegations against a commerce teacher in PSBB School,Chennai has been shocking. Inquiry should be conducted and action must be taken against those who are involved including school authorities who failed to act against the complaints from students. (1/3)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 24, 2021
இதில் ராஜகோபாலன் பல முக்கியமான தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடமாகவே மாணவிகளிடம் அத்து மீறி நடந்து கொண்டதாகவும், மாணவிகளுக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்புவது. அவர்களிடம் தவறாக நடந்து கொள்வது. தவறாக மெசேஜ் அனுப்புவது போன்று செய்தேன்.
கடந்த 27 வருடமாக ஆசியராக வேலை செய்து வருகிறேன். எனக்கு இந்த பள்ளியில் இப்படி பல கருப்பு ஆடுகள் இருப்பது தெரியும். நான் மட்டும் இல்லை, பலர் இப்படி இருக்கிறார்கள் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.