பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்... பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் 5 பெரிய நடவடிக்கை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தொடர்புள்ள பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட மறுநாளே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
முக்கிய முடிவுகள்
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளிவிவகார அமைச்சகத்தால் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானியர்களுக்கு சார்க் விசா கிடைக்காது என்றும், பாகிஸ்தானுடனான அடாரி எல்லை மூடப்படும் என்றும், பாகிஸ்தானில் உள்ள தனது உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து இந்தியா ஊழியர்களை திரும்பப் பெறும் எனவும்,
விசாக்கள் ரத்து
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மே 1ம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற இந்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் உள்ள பாகிஸ்தானிய பிரஜைகளின் தற்போதைய விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்வும் ஆணையிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |