பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்திற்கு எதிரான வெறிச்செயல்! கனடா கண்டனம்
பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்திற்கு எதிரான வெறிச்செயல் என கனடா செனட்டர் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனடா கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீதான கொடூரத் தாக்குதலுக்கு கனடா தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
முன்னதாக, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவி வந்த சற்று இறுக்கமான சூழ்நிலையில், இந்த தாக்குதல் குறித்து கனடா கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கனடா சார்பில் செனட்டர் லியோ ஹூசகோஸ் தனது வலுவான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்து சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது வெறுமனே ஒரு பயங்கரவாதச் செயல் மட்டுமல்ல; இது மனிதநேயத்தின் மீதான ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்" என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த கொடூரச் செயலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உலக நாடுகள் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு ஆதரவு
இதே கருத்தை எதிரொலிக்கும் விதமாக, அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் இந்தியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |