டசின் கணக்கானோர் பலி... 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரு ஆசிய நாடுகள்
டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்த நிலையில், புதன்கிழமை மாலை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையான முயற்சி
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிக்கலான ஆனால் தீர்க்கக்கூடிய பிரச்சினைக்கு நேர்மறையான தீர்வைக் காண இரு தரப்பினரும் உரையாடல் மூலம் உண்மையான முயற்சிகளை மேற்கொள்வார்கள் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் போர் நிறுத்தம் அல்லது பாகிஸ்தானிடம் கோரியது உள்ளிட்ட எது தொடர்பிலும் ஆப்கானிஸ்தான் இதுவரை பதிலளிக்கவில்லை.
இரவில் நடந்த இராணுவ நடவடிக்கைகளில் டசின் கணக்கான ஆப்கானிய பாதுகாப்புப் படையினரையும் போராளிகளையும் கொன்றதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இது சமீபத்திய ஆண்டுகளில் அண்டை நாடுகளிடையே நடந்த மிக மோசமான வன்முறை சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. தாக்குதலில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என பாகிஸ்தான் தெரிவித்த நிலையில்,
ஆப்கானிஸ்தான் ஆதரிப்பதாக
ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹாரில் உள்ள எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு டசின் பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தலிபான்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தங்களது எல்லைக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய துப்பாக்கிதாரிகளை ஆப்கானிஸ்தான் ஆதரிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து இந்தத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |