ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை - இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையின் லீக் போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.
இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை நவம்பர் 14 ஆம் திகதி தொடங்கி வரும் நவம்பர் 23 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இதில் நேற்றைய 7வது லீக் போட்டியில், இந்தியா ஏ அணி மற்றும் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 19 ஓவர்கள் முடிவில் 136 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா தரப்பில், அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 45 ஓட்டங்களும், நமன் தீர் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, 137 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 13.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில், அதிகபட்சமாகமாஸ் சதகத் 47 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, பி பிரிவில் 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
2 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ள இந்தியா நாளைய போட்டியில் குவைத்தை எதிர்கொள்ள உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |