சொன்னபடியே சம்பவம் செய்த பாகிஸ்தான்! எந்த அணியையும் வெல்வோம் என்ற கேப்டன்
எந்த அணியையும் வெல்லும் அளவிற்கு நாங்கள் திறமையானவர்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் அஹா தெரிவித்தார்.
முகமது ஹாரிஸ் மிரட்டல்
ஆசியக் கிண்ணத் தொடரின் நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 160 ஓட்டங்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் (Mohammad Haris) 66 ஓட்டங்களும், பார்ஹான் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ஓமன் வீரர்கள் பாகிஸ்தானின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து நடையைக் கட்டினர்.
இதனால் அந்த அணி 16.4 ஓவரில் 67 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஹம்மத் மிர்ஸா 27 ஓட்டங்கள் எடுத்தார்.
பாகிஸ்தானின் சைம் அயூப், சுஃபியன் முகீம் மற்றும் அஷ்ரப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அனைவரும் வித்தியாசமானவர்கள்
பயிற்சியாளர் மைக் ஹெஸன் தங்களிடம் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக கூறியிருந்தார்.
அவர் கூறியதுபோலவே இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதனை அணித்தலைவர் சல்மான் அஹாவும் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், "எங்களிடம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வித்தியாசமானவர்கள் அயூப் கூட. எங்களிடம் 4-5 நல்ல தேர்வுகள் உள்ளன. துபாய் மற்றும் அபுதாபியில் விளையாடும்போது தேவைப்படும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |