இம்ரான் கானை கைது செய்யப் போராடும் பொலிஸார்: தடுத்து நிறுத்தும் ஆதரவாளர்கள்
பாகிஸ்தான் காவல்துறை முன்னாள் பிரதமர் இம்ரான் கானை(Imran Khan) கைது செய்யச் சென்ற போது அவர்களைத் தடுத்து நிறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.
இம்ரான் கான் மீது வழக்கு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்ய லாகூரிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற பொலிசாரை அவரது ஆதரவாளர்கள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போராடி வருகின்றனர்.
@reuters
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் கைது செய்ய வந்த காவல்துறையின் மீது கல்லெறி தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு எதிராக நீரை அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க பொலிஸார் போராடி வருகின்றனர்.
@Reuters
ஊழல் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான் கான் வெளிநாட்டுப் பிரமுகர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களை விற்றதாக கூறி குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த நிலையில் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
@Reuters
இம்ரான்கானுக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் கடந்த வாரம் நீதிமன்றம் அவருக்குக் கைது செய்யக்கோரி வாரண்ட் பிறப்பித்தது.
இம்ரான்கான் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து மறுதேர்தல் வைக்குமாறு அரசிடம் கோரினார். ஆனால் அந்த கோரிக்கை தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிராகரித்துள்ளார். மேலும் திட்டமிட்டபடி இந்த ஆண்டு தேர்தல் நடக்கும் எனக் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.