தயவுசெய்து என் மகளை காப்பாற்ற.. கிரிக்கெட் வீரரின் உருக்கமான பதிவு
எனது மகளுக்காக அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அப்ரிடி உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முதல்தர போட்டிகளில் விளையாடி வருபவர் ஆசிப் அப்ரிடி.
35 வயதாகும் ஆசிப் அப்ரிடி கடைசியாக முல்டன் சுல்தான் அணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் விளையாடினார். இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தை ஒன்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகைப்படம் ஒன்றை ஆசிப் அப்ரிடி பகிர்ந்துள்ளார்.
அதில், எனது மகளின் உடல்நிலை சீராக தயவுசெய்து அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Plz everyone pray for my daughter health ?. pic.twitter.com/qCYMXF6R6F
— Asif Afridi 65 (@asifafridi65) June 6, 2022
அவரது இந்த டிவீட்டை பார்த்த பலரும் உங்கள் மகள் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வருவார், நாங்கள் அவருக்காக பிரார்த்திக்கிறோம், மனஉறுதியுடன் இருங்கள் என பதில் ட்வீட் செய்து வருகின்றனர்.